சிலப்பதிகாரம்_கட்டுரை காதை

கட்டுரை காதை


1:மதுராபதி



சடையும் பிறையும் தாழ்ந்த சென்னிக் 
குஉண்கண் தவளவாள் முகத்தி; 
கடைஎயிறு அரும்பிய பவளச்செவ் வாய்த்தி; 
இடைநிலைவி நித்தில நகைத்தி, 
இருமருங்கு இருண்ட நீலம் ஆயினும்,

வலமருங்கு பொன்னிறம் புரையும் மேனியன்!
இடக்கை பொலம்பூந் தாமரை ஏந்தினும்,
வலக்கை அஞ்சுடர்க் கொடுவாள் பிடித்தோள்;
வலக்கால் புனைகழல் கட்டினும், இடக்கால் 
தனிச்சிலம்பு அரற்றும் தகைமையள், பனித்துறைக்

கொற்கைக் கொண்கன், குமரித் துறைவன்,
பொற்கோட்டு வரம்பன், பொதியிற் பொருப்பன், 
குலமுதற்கிழத்தி; ஆதலின்-அலமந்து,
ஒருமுலை குறைத்த திருமா பத்தினி, 
அலமருதிருமுகத்து ஆயிழை நங்கை-தன்

முன்னிலை ஈயாள் பின்னிலைத் தோன்றிக்
‘கேட்டிசின் வாழி, நங்கை! என் குறை' என
                                                -   இளங்கோவடிகள்





Comments

Post a Comment