Posts

Showing posts from April, 2023

சிலப்பதிகாரம்_கட்டுரை காதை

கட்டுரை காதை 1:மதுராபதி சடையும் பிறையும் தாழ்ந்த சென்னிக்  குஉண்கண் தவளவாள் முகத்தி;  கடைஎயிறு அரும்பிய பவளச்செவ் வாய்த்தி;  இடைநிலைவி நித்தில நகைத்தி,  இருமருங்கு இருண்ட நீலம் ஆயினும், வலமருங்கு பொன்னிறம் புரையும் மேனியன்! இடக்கை பொலம்பூந் தாமரை ஏந்தினும், வலக்கை அஞ்சுடர்க் கொடுவாள் பிடித்தோள்; வலக்கால் புனைகழல் கட்டினும், இடக்கால்  தனிச்சிலம்பு அரற்றும் தகைமையள், பனித்துறைக் கொற்கைக் கொண்கன், குமரித் துறைவன், பொற்கோட்டு வரம்பன், பொதியிற் பொருப்பன்,  குலமுதற்கிழத்தி; ஆதலின்-அலமந்து, ஒருமுலை குறைத்த திருமா பத்தினி,  அலமருதிருமுகத்து ஆயிழை நங்கை-தன் முன்னிலை ஈயாள் பின்னிலைத் தோன்றிக் ‘கேட்டிசின் வாழி, நங்கை! என் குறை' என                                                 -   இளங்கோவடிகள்